நாகர்கோவிலில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 5 Aug 2017 10:24 PM IST)
t-max-icont-min-icon

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணமாக 20 சதவீத தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடந்தது.

நாகர்கோவில்,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணமாக 20 சதவீத தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஐவின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், நிர்வாகிகள் அய்யப்பன் பிள்ளை, சுந்தர்ராஜ், பிரான்சிஸ் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கி பேசினர். முடிவில், மாவட்ட துணைத்தலைவர் சிவதாணுபிள்ளை நன்றி கூறினார்.


Next Story