தி.மு.க. சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது
புதுக்கோட்டையில் தி.மு.க. சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தூத்துக்குடி,
புதுக்கோட்டையில் தி.மு.க. சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
பாடல் ஒப்புவித்தல் போட்டி
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் இலக்கிய அணி சார்பில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி (6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. எனது தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய செல்வம் தியேட்டர் அருகிலுள்ள லட்சுமி மகாலில் இந்த போட்டி நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு, பாரதிதாசன் எழுதிய தமிழச்சியின் கத்தி எனும் புத்தகத்தில் “அத்தான் என்றெதிர் வந்தான்“எனும் தலைப்பில், “செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங்கள் போல்“ எனத் தொடங்கி ஆன மட்டும் பார்ப்போம் வடக்கர் தம்மை என முடியும் பாடலும், அல்லது “குறிஞ்சி திட்டு“ எனும் பாரதிதாசன் நூலில் “தமிழறியார் தமிழ்ச் செயலில் தலையிடுதல் சரியா? எனத் தொடங்கி அழியட்டும் தமிழ் என்ப தொடங்கி துங்கள் நாகரிகம் என்று முடியும் பாடல் ஒப்புவித்தல் வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு, பாரதிதாசன் எழுதிய “தமிழியக்கம்“ எனும் நூலில் தமிழ்க்காக்க எழுந்திடு எனும் தலைப்பில் ஓண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் எனத் தொடங்கி வாழிய நீ தமிழ்த்தாய்க்கு வரும் பெருமை உன் பெருமை என முடியும் பாடல் ஒப்புவித்தல் வேண்டும். அல்லது பாரதிதாசன் எழுதிய “பன்மணித்திரள்“ எனும் நூலில் “மதிமுகம்“ எனும் தலைப்பில் “மாலைப் பொழுதினிலே“ எனத் தொடங்கி “பாய்ந்ததென் காதலுள்ளம்“ என முடியும் பாடல் ஒப்புவித்தல் வேண்டும்.
பரிசு
மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3–வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.1,500 வழங்கப்படுகிறது. இந்த போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99654 24781, 94431 92545 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story