பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கக்கூடாது திரைப்பட இயக்குனர் கவுதமன் பேட்டி
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கக்கூடாது என்று திரைப்பட இயக்குனர் கவுதமன் கூறினார்.
கடலூர்,
திரைப்பட இயக்குனரும், தமிழக வாழ்வுரிமைக்கான மாணவர், இளைஞர்கள் கூட்டமைப்பின் தலைவருமான கவுதமன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காவிரி தண்ணீரை கொடுக்காமல் டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி விட்டு எஞ்சிய பகுதிகளையும் பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோல் எடுக்க ஒரு குழாய் எடுத்துக்கொண்டு வந்தாலும் எங்கள் இளைஞர்கள் போர்வீரர்கள் போல நின்று தடுப்பார்கள். இதை எங்கள் மீது திணிக்கப்படுகிற யுத்தமாகத்தான் பார்க்கிறோம். இதை எதிர்த்து அறவழியில் போராடுவோம். தமிழக ஆட்சியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எங்களை அடமானம் வைக்கக்கூடாது. எங்களை அழித்து இந்த தேசம் வாழ அனுமதியோம். எங்கள் வாழ்வியல் நிலங்களில் ஒரு அங்குலம் இடத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்.
வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் கடலூரில் சிப்காட் கொண்டு வந்தார்கள். அங்கே நிலத்தடி நீரெல்லாம் ரசாயன நீராகி விட்டது. நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் கொண்டு வந்தார்கள், அங்கேயும் நிலத்தடி நீர் எல்லாம் போய் விட்டது. கதிராமங்கலத்தில் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை, ஈரோட்டில் சாயப்பட்டறை கொண்டு வந்ததால் நொய்யல் ஆறே பாழ்பட்டு போய் விட்டது. எனவே வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் இந்த மண்ணையும், நிலத்தடி நீரையும் பாழக்கும் செயலை அனுமதிக்க முடியாது.
கடலூருக்கு வருகை தர உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எந்த சூழ்நிலையிலும் கடலூர்-நாகை மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக உருவாக்க விட மாட்டோம் என்று அறிவித்து விட்டு கடலூருக்கு வர வேண்டும். இது தொடர்பாக அவர் எதுவும் பேசாமல் வந்தாலும், வந்து விட்டு எதுவும் பேசாமல் போனாலும் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவது உறுதியாகிவிட்டது என்று நினைத்து போராட்டத்தை தொடங்குவோம்.
எங்கள் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுப்போம். இது தொடர்பாக 45 கிராமங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதியையும், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும், திருமுருகனையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு கவுதமன் கூறினார்.

Related Tags :
Next Story