மாவட்டத்தில் 53 மையங்களில் குரூப்-2 தேர்வை 15, 584 பேர் எழுதுகிறார்கள்


மாவட்டத்தில் 53 மையங்களில் குரூப்-2 தேர்வை 15, 584 பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 53 மையங்களில் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வை 15 ஆயிரத்து 584 பேர் எழுதுகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1,953 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 ஏ தேர்வு அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி அறிவித்தது. அன்று முதல் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.

இந்த குரூப்-2 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தேர்விற்கு 15,584 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக கிருஷ்ணகிரியில் 35 மையங்களும், ஓசூரில் 16 மையங்களும், தேன்கனிக்கோட்டையில் 2 மையங்களும் என மொத்தம் 53 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், கைகடிகாரம் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

அதே போல மோதிரம் அணிந்து செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு நடைபெறும் மையங்களில் அனைத்திலும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பஸ் வசதியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இதே போல கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story