விதிகளை மீறிய 521 வாகன ஓட்டுனர்களின் லைசென்சுகள் தற்காலிகமாக ரத்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் விதிகளை மீறிய 521 வாகன ஓட்டுனர்களின் லைசென்சுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களின்போது ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், அதிக வேகமாக, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், பயணிகள் வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல் போன்ற வாகன ஓட்டுனர்கள் மீது உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்புக்குழு வழிகாட்டுதலின்படி, மேற்படி தவறுகள் செய்யும் ஓட்டுனர்களின் உரிமம் குறைந்தது 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து மற்றும் நிரந்தர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில், இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த மாதம் 31-ந் தேதி வரை நடைபெற்ற வாகன சோதனையின்போது, வாகன விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுனர்கள் மீது 2 லட்சத்து 10ஆயிரத்து 616 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 763 வாகன ஓட்டுனர்களின் உரிமங்கள் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றில் 521 வாகன ஓட்டுனர்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற 242 வாகன ஓட்டுனர்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்ய பரிசீலனை செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். வாகனங்களின் எண் பலகை முறையாக, தெளிவாக இருக்க வேண்டும், அரசு நிர்ணயித்த அளவில் மற்றும் நிறத்தில் வாகன எண்களை மட்டும் எழுத வேண்டும், அதுதவிர வேறு படங்களோ, வாசகங்களோ இடம் பெறக்கூடாது. வாகனம் ஓட்டும்போது எக்காரணம்கொண்டும் செல்போன் பேசக்கூடாது.
மேலும், அனைத்து வாகன ஓட்டுனர்களும் தங்களின் வாகன ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் பதிவு சான்றிதழ் புத்தகம், காப்பீடு சான்றிதழ், வாகன அனுமதி போன்ற ஆவணங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களிலும் மற்றும் சோதனை சாவடிகளிலும் தினந்தோறும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையின்போது அனைத்து வாகன ஓட்டுனர்களும் மேல் குறிப்பிட்ட ஆவணங்களை முறையாக வைத்திருந்து காட்டுவதோடு, மேற்கண்ட விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிப்பதோடு, ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்ததகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story