இணையதள மணல் விற்பனையில் தவறுகளை தவிர்க்க சிறப்பு முகாம்
இணையதள மணல் விற்பனையில் தவறுகளை தவிர்க்க சிறப்புமுகாம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை,
இணையதள சேவை மூலம் மணல்விற்பனை செய்யப்படும்போது தவறான வாகன பதிவுகளை தவிர்க்க வாகன ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திற்கான வாகன ஆவணம் சரிபார்ப்பு சிறப்பு முகாம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சருகணியாறு வடிநில கோட்ட அலுவலகத்தில் நாளை (திங்கட் கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வட்டார போக்குவரத்து அலுவலர்களால் நடைபெறுகிறது.
எனவே சிவகங்கை மாவட்டத்தில் இருந்து இணையதள சேவை மூலம் மணல் பெறுவதற்கு விரும்பும் வாகன உரிமையாளர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தின் நடப்பில் உள்ள வாகன புத்தகம், வாகன அனுமதிசான்று, வாகன தகுதிசான்று, சாலைவரி ரசீது மற்றும் காப்பீட்டு விவரங்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.
பின்னர்அதன் நகலை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து அந்த படிவத்துடன் அசல் சான்றுகளையும் கொண்டு வந்து சரிபார்த்து கொள்ள வேண்டும். முகாம் களில் ஆவண சரிபார்ப்பு மேற்கொள்ளும் வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும்.
எனவே சிவகங்கை மாவட்டத்தில் இருந்து இணையதளம் மூலம் மணல் சேவையை பெற விரும்பும் வாகன உரிமையார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் மேலும் தவறான ஆவணங்கள் இருந்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story