வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1½ லட்சம் பொருட்கள் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கோட்டூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தோட்டம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நபியதீன் (வயது 48). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சபீமாபானு (35). இவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சபீமாபானு லெட்சுமாங்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்றுமுன்தினம் சபீமாபானுவின் உறவினர் ஒருவர் உங்கள் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடக்கிறது என தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் ஊருக்கு வந்த சபீமாபானு வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும், பீரோ திறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ஹோம் தியேட்டர் பொருட்கள், விலை உயர்ந்த கேமரா, டி.வி., கம்ப்யூட்டர், 50 உயர் ரக புடவைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வலைவீச்சு
இதுகுறித்து சபீமாபானு கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூ. 1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். திருவாரூரில் இருந்து ராக்சி மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் வரை ஓடி ரேடியோ பார்க் என்ற இடத்தில் நின்றது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

Related Tags :
Next Story