செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இலங்கை வாலிபர் ரெயில் மோதி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இலங்கை வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
கும்மிடிப்பூண்டி,
ஈரோடு மாவட்டம், ஈச்சம்பள்ளியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் உதயராஜ்(வயது30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் கடந்த 5 நாட்களாக உதயராஜ் தங்கி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார்.
அவர் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி முகாமையொட்டி உள்ள ரெயில் தண்டவாளத்தை செல்போனில் பேசிக்கொண்டே கடந்து சென்றார். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட உதயராஜ் படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story