வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சவுந்திரராஜன் (வயது 28). இவர் டிப்ளமோ படித்துவிட்டு, சிங்கபெருமாள்கோவிலை அடுத்த பாரேரி ஜீவா நகரில் உள்ள தனது நண்பருடன் தங்கி வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலை கிடைக்காத ஏக்கத்தில் மனம் உடைந்த சவுந்திரராஜன் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுந்திரராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story