சித்தாமூர் அருகே பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது
சித்தாமூர் அருகே பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூரை அடுத்த மதுராபுதூரை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சந்திரன் (36) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகனின் மனைவி மஞ்சுளா (40), சந்திரனிடம் பணம் கேட்டார். அப்போது தகராறு ஏற்பட்டு சந்திரன் மஞ்சுளாவின் கையில் கத்தியால் வெட்டினார். இது குறித்து முருகன் சித்தாமூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் சந்திரனை கைது செய்து மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். காயம் அடைந்த மஞ்சுளா மதுராந்தகம் அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணவாளநகர் ஒண்டிக்குப்பம்
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ராஜி (26). நேற்று முன்தினம் இவர் தனது நண்பர் சிவாவுடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். ஒண்டிக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவர் தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு கத்தியால் ராஜியை குத்தி விட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story