அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்


அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தினால் தான் தமிழகத்தில் நிலவும் குழப்பத்திற்கு தீர்வு ஏற்படும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் ராகுபகவானை தரிசனம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று காலை கும்பகோணம் வந்தார். பின்னர் அவர் கும்பகோணம்- அசூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார். பின்னர் அங்கிருந்து அவர், திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றார். அங்கு ராகுபகவானுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தினார். அங்கிருந்து அசூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு கார்த்தி சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

குஜராத்தில் வெள்ளச்சேதங்களை பார்வையிட சென்ற போது ராகுல் காந்தியை தாக்க முயற்சி செய்தது கண்டிக்கத்தக்கது. இது போல் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி சளைக்காது. மக்கள் பணியைதொடர்ந்து செய்யும். அ.தி.மு.க.வில் குழப்பம் உள்ளதால் தமிழகத்தில் அரசு இருக்கிறதா? என்றே தெரியவில்லை. ஜெயலலிதா முதல்- அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக தான் மக்கள் வாக்களித்தனர். தமிழகத்தில் சட்டரீதியாக ஆதரவு இருப்பதால் ஆட்சி நீடிக்கிறது. ஆனால் மக்களின் தார்மீக ஆதரவு இல்லை என்பதுதான் உண்மை. மக்களின் ஆதரவு இல்லாத அரசாகவே செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் யார், துணை பொதுச்செயலாளர் யார், கட்சியை வழி நடத்துவது யார் என்ற குழப்பம் உள்ளது.இந்த குழப்பத்தினால் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் நிலவும் குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓ.வி.கிருஷ்ணசாமி, ஓ.வி.கே.வெங்கடேசன், பாலு உள்பட பலர் சென்றனர். 

Related Tags :
Next Story