ரூ.1.30 கோடியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் எம்.எல்.ஏ. ஆய்வு
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பச்சுடையாம்பட்டி, பட்டணம், சீராப்பள்ளி, தொப்பப்பட்டி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட 312 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ஒருவந்தூர் காவிரி ஆற்றில் ஏற்கனவே 4 நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சமீபத்தில் காவிரி ஆற்றில் இந்த பகுதிக்கு தண்ணீர் வரத்து நின்று விட்டதால், குடிநீர் எடுக்கும் அளவு மிகவும் குறைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி குடிநீரை நம்பி இருந்த பெரும்பாலான குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் சேந்தமங்கலம் பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை புனரமைத்து தொகுதி மக்களுக்கு தேவையான குடிநீரை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து இந்த திட்டத்தை சீரமைக்க தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும் பகுதியில் கூடுதலாக 2 கிணறுகள் தோண்டி, அதில் இருந்து நீரை எடுத்து வந்து கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான கிணற்றில் விடுவதற்கு ரூ.1 கோடியே 30 லட்சத்தில் புதிய அபிவிருத்தி திட்டத்திற்கு அமைச்சர் வீரமணி ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து ஒருவந்தூர் காவிரி ஆற்றில் 2 புதிய நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நேற்று ஒருவந்தூர் காவிரி ஆற்றில் சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் திட்டப்பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் திட்டத்தை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
மேலும் காவிரி ஆற்றில் ஈஸ்வரன் கோவில் அருகில் மோகனூர், எருமப்பட்டி, வளையப்பட்டி, புதுப்பட்டி, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டு உள்ள நீர் உறிஞ்சும் கிணறு பகுதிக்கு காவிரி நீர் வராததால், அப்பகுதி வறண்டு குடிநீர் உறிஞ்சுவது மிகவும் குறைந்து, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதை பார்வையிட்ட சந்திரசேகரன் எம்.எல்.ஏ. காவிரி ஆற்றின் நடுபகுதியில் செல்லும் நீரை இந்த நீர் உறிஞ்சும் கிணறு வழியாக திருப்பி விட தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1½ லட்சம் செலவில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தார். இதையொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் தண்ணீரின் போக்கு மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் தங்கவேல், ராமமூர்த்தி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கருமண்ணன், ஜெகதீசன், வரதராஜன், சேந்தமங்கலம் பேரூராட்சி செயலாளர் ராஜேந்திரன், எருமப்பட்டி பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story