இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி,
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில், "இந்தியா எல்லோருக்கும்" என்கிற தலைப்பில் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் அபுல்ஹசன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், இந்தியா ஒரு பன்முகத்தன்மை மிக்க தேசம், பலவிதமான இன, மதம், மொழி, கலாசாரம் பின்பற்றக்கூடிய மக்கள் வாழக்கூடிய நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக ஒற்றை கலாசாரம், மதம், மொழியை மத்திய அரசு திணித்து வருகிறது. மத்திய அரசை பின்னால் இருந்து ஒரு சில அமைப்புகள் இயக்கி வருகின்றன. நீட் தேர்வு, மாட்டிறைச்சி விவகாரம், இந்தி மொழி திணிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றின் மூலம் மாநில சுயாட்சி உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய அரசை கண்டித்தும் வருகிற அக்டோபர் மாதம் 30–ந்தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம் உள்ளிட்டவைகள் நடத்த உள்ளோம். திருச்சியில் அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். அப்போது இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் நாசர் உள்பட பலர் உடன் இருந்தனர்.