மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.55 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.55 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Aug 2017 5:00 AM IST (Updated: 6 Aug 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற அமெரிக்க, யூரோ பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த மியான்மர் நாட்டை சேர்ந்த நிலர் (வயது 30), மன்ஜூ (29) ஆகியோரின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள யூரோ பணம் கடத்த இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதேபோல் மலேசியாவுக்கு செல்ல விமானத்தில் ஏற வந்த சென்னையை சேர்ந்த அன்சாரி (40), அப்துல் (35) ஆகியோரின் உடைமைகளில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க, யூரோ பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த முத்தமிழ்செல்வம் (37) கொண்டு வந்த பெட்டியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. மியான்மார் நாட்டை சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மற்ற 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story