வகுப்பறை கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்: மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவ-மாணவிகள்
அரசு பள்ளியில், வகுப்பறை கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் நிலைக்கு மாணவ-மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
செம்பட்டி,
செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.புதுக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க போதுமான வகுப்பறைகள் இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் ரூ.12 லட்சத்தில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகளும் தொடங்கின.
ஆனால் பல்வேறு நிர்வாக காரணங்களால் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட வேகத்திலேயே பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் அவல நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்றோரும், செம்பட்டி பகுதி மக்களும் பலமுறை புகார் தெரிவித்தும் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மாணவர்களின் நிலை குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், கட்டிட வசதி இல்லாததால் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். புதிய கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் எதற்காக பாதியில் நிறுத்தப்பட்டது என அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக விளக்கம் கிடைப்பதில்லை.
ஒப்பந்ததாரர்களுக்கு பணப்பட்டுவாடா முறையாக கொடுக்கப்படாததாலேயே பணிகள் நிறுத்தப்பட்டதாக கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதை கவனித்து பாதியில் நிறுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story