திண்டுக்கல்லில் பரபரப்பு: பா.ஜனதா நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
திண்டுக்கல்லில் பா.ஜனதா நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் அய்யப்பன் (வயது 35). இவர் திண்டுக்கல் பூமார்க்கெட்டில் வேலை பார்த்து வருவதுடன், பா.ஜனதா கட்சியின் மாநகர செயலாளராகவும் உள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை வெளியே விட்டுவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் வீட்டின் வெளியே இருந்து கருகிய வாசனை வந்தது. இதையடுத்து அவர் வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அய்யப்பன் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில், தனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என்பவருக்கும் பாதை பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் அவர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்றும் கூறி இருந்தார்.
இதையடுத்து கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்றுமுன்தினம் இரவு மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டு கீழே சாய்ந்து கிடந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story