டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் சுகாதாரத்துறை அலட்சியம் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் சுகாதாரத்துறை அலட்சியமாக செயல்பட்டு வருவதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பசீர்அகமது முன்னிலை வகித்தார்.
இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவிகள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பழனி தொகுதி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கிடையே இ.பெரியசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி, கோவை, நெல்லை உள்பட மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அலட்சியமாக உள்ளார். தங்கள் மீதான வழக்கை சந்திக்கவும், சொத்தை காப்பாற்றவுமே அமைச்சர்கள் குறியாக உள்ளனர்.
மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு, செயல்படாத அரசாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பன்றிக்காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும், அப்போது கொண்டு வரப்பட்ட 4 ஆயிரத்து 500 மெகாவாட் மின்திட்டம் மூலம் தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மருத்துவ காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story