காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னக்கானல்,
சின்னக்கானலை அடுத்துள்ள ஆனையிரங்கல் பகுதியில் சமீபகாலமாக ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. காட்டுயானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் ஒற்றை யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தையும், ரேஷன்கடையையும் சேதப்படுத்தியது. அதுமட்டுமின்றி அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஜீப்பையும் சேதப்படுத்தியது.
பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் காட்டுயானையை விரட்ட முயன்றனர். இதனால் மிரண்டு போன அந்த யானை ஆக்ரோஷமாக ஓடியது. அப்போது சாலையோரத்தில் இருந்த பெட்டிக்கடையையும் சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. காட்டுயானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கக்கோரியும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கக்கோரியும் போடிமெட்டு- மூணாறு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் தமிழ்நாடு போடி, தேனியில் இருந்து மூணாறு வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதற்கிடையே தகவல் அறிந்ததும் தேவிகுளம் வனச்சரகர் நிபுகிரண் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஊழியர்கள் மூலம் தனிப்படை அமைத்து காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் மூணாறை அடுத்த கன்னிமலை எஸ்டேட் லோயர் பகுதியில் காட்டுயானை ஒன்று புகுந்து சங்கர் என்பவருடைய பெட்டிக்கடையை சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதில், கடையின் பெரும் பகுதி சேதம் அடைந்தது.

Related Tags :
Next Story