நடத்தையில் சந்தேகம் தலையை துண்டித்து மனைவி படுகொலை ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
நாலசோப்ராவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி தலையை துண்டித்து படுகொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பால்கர்,
நாலசோப்ராவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி தலையை துண்டித்து படுகொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஆட்டோ டிரைவர்பால்கர் மாவட்டம் நாலசோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியில் உள்ள சர்மாவாடி குடிசை பகுதியை சேர்ந்தவர் அஜய் யாதவ் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரோஜா (28). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சிறு சிறு பிரச்சினைகளுக்காக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும் கணவனுக்கு மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் இருந்தது.
சம்பவத்தன்று இரவு வழக்கம் போல கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இது அஜய் யாதவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளின் கண் எதிரே....இந்தநிலையில் சரோஜா தூங்கியவுடன் நள்ளிரவு நேரத்தில் அஜய் யாதவ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்தநிலையில் சத்தம் கேட்டு தூங்கி கொண்டு இருந்த குழந்தைகள் எழுந்தனர்.
எனினும் மனைவி மீது இருந்த ஆத்திரம் அடங்காத அவர் வெறி பிடித்தவர் போல ஆனார். அவர் குழந்தைகளின் கண் எதிரிலேயே மனைவியின் தலை மற்றும் கையை துண்டித்தார். அதை வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்க்குள் போட்டார்.
தந்தை வீட்டிற்கு சென்றார்பின்னர் அவர் ஒன்றும் நடக்காதது போல பிள்ளைகளை அழைத்து கொண்டு அருகில் உள்ள அவரது தந்தை ராம்ஜியின் வீட்டிற்கு சென்றார். அப்போது ராம்ஜி, சரோஜா குறித்து அஜய் யாதவிடம் கேட்டார். ஆனால் அவர் மனைவி வீட்டில் தூங்குவதாக தெரிவித்தார்.
எனினும் மூத்த மகன், தாய் சரோஜாவை தந்தை கொலை செய்ததை தாத்தாவிடம் கூறினான். இதையடுத்து ராம்ஜி இதுகுறித்து துலிஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் அஜய் யாதவ் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
கைதுதகவல் அறிந்து வந்த போலீசார் வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் போலீசார் வசாய் கிழக்கு பகுதியில் ஒரு மாட்டு தொழுவத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் அஜய் யாதவை கைது செய்தனர். அவரிடம் மனைவியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன், மனைவியின் தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் நாலசோப்ரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.