இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக தொலைபேசி நிலையம் நடத்தி வந்த 5 பேர் கைது


இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக தொலைபேசி நிலையம் நடத்தி வந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 6 Aug 2017 4:15 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக தொலைபேசி நிலையம் நடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக தொலைபேசி நிலையம் நடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

மும்பை டிராம்பே சீத்தாகேம்ப் பகுதியில் சட்டவிரோதமாக தொலைபேசி நிலையம் (டெலிபோன் எக்சேன்ஜ்) செயல்பட்டு வருவதாக தீவிரவாத தடுப்புப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு வீட்டில் தொலைபேசி நிலையம் செயல்பட்டு வருவதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை நடத்தியதில் கணினி, 70 சிம்கார்டுகள் உள்ளிட்ட பல கருவிகள் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

5 பேர் கைது

இதனை தொடர்ந்து போலீசார் இதனை நடத்தி வந்த நூர் முகமது அஷ்ரப் (வயது35), மற்றும் ஊழியர் நசீர் கேதார்ஹசைன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோத தொலைபேசி நிலையம் செயல்பட்டு வந்ததும், இதன் மூலம் அரசுக்கு ரூ.49 கோடியே 14 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரியவந்தது.

இதேபோல சிவாஜிநகர் பகுதியில் சட்டவிரோத தொலைபேசி நிலையம் நடத்தி வந்த முகமது நசீம் கான், ஷாம் சேக் (34), சாகிப் (36) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story