தினமும் ஒரு நெல்லிக்கனி


தினமும் ஒரு நெல்லிக்கனி
x
தினத்தந்தி 6 Aug 2017 4:00 PM IST (Updated: 6 Aug 2017 3:59 PM IST)
t-max-icont-min-icon

* நெல்லிக்கனி சளி, புற்றுநோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்தும் அசாத்திய தன்மை கொண்டது.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நெல்லிக்கனியில் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பி இருக்கிறது. அதிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளடங்கியிருக்கிறது.

* நெல்லிக்கனி சளி, புற்றுநோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்தும் அசாத்திய தன்மை கொண்டது.

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் நெல்லிக்கனிக்கு முக்கிய பங்கு உண்டு. இது இதயத்திற்கும் நலம் சேர்க்கும்.

* இதிலிருக்கும் கசப்பான மற்றும் புளிப்பான சுவை செரிமான நொதிகள் சீராக செயல்பட தூண்டுகிறது. செரிமான கோளாறு பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வை கொடுக்கிறது. குடல் இயக்கம் சீராக நடைபெறவும், இரைப்பை, குடல் திசுக்களை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

* ஆரோக்கியமான, நீண்ட, பளபளப்பான கூந்தலுக்கு நெல்லிக்காயின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. அதனால்தான் கூந்தல் பராமரிப்பு பொருட்கள் அனைத்திலும் நெல்லிக்கனி இடம்பிடித்திருக்கிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலும் கொண்டது. குளிர்காலங்களில் சளி, இருமல் பிரச்சினையை தவிர்க்க உதவுகிறது. விஷத்தன்மை பாதிப்புகளில் இருந்து உடல் செல்களை பாதுகாக்கும் காரணியாகவும் செயல்படுகிறது.

* தோல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு கல்லீரல் பாதிப்பே முக்கிய காரணமாக இருக்கிறது. நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கல்லீரலுக்கு நலம் சேர்க்கும். தோல் பிரச்சினைகளும் கட்டுப்படும். நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.

* நெல்லிக்கனியில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் துணைபுரியும். அதிலும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

* 100 கிராம் நெல்லிக்கனியில் 60 கலோரிகளே இருக்கிறது. அதேவேளையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஹார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. நெல்லிக்கனியை தினமும் ருசிப்பது உடல் நலத்திற்கு நலம் சேர்க்கும்.


Next Story