ராகுல்காந்தி மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாவட்ட வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குஜராத்தில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கார் மீது பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் கணேசன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, எஸ்.டி.சி.கனியம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் அலெக்சாண்டர், சாமுவேல் ஞானதுரை, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story