தொண்டர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரத்தை தொடங்க வேண்டும் எடியூரப்பா வேண்டுகோள்
சமூக வலைதளங்கள் மூலம் தொண்டர்கள் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
சமூக வலைதளங்கள் மூலம் தொண்டர்கள் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரசாரத்தை தொடங்க வேண்டும்கர்நாடக பா.ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக வலைதள ஆர்வலர்கள் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்து பேசியதாவது:–
பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சமூக வலைதளங்களையும், வலைதள ஊடகங்களையும் அதிகமாக பயன்படுத்திக் கொண்டார். அதே போல் உத்தரபிரதேச தேர்தலிலும் இதன் பயன்பாடு அதிகமாக இருந்தது. காநாடக சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரத்திற்கு சமூக வலைதளங்கள் மற்றும் வலைதள ஊடகங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். இப்போது இருந்தே இந்த பிரசாரத்தை தொடங்க வேண்டும்.
பா.ஜனதாவுக்கு மக்கள் ஆதரவுகர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளில், 170 தொகுதிகளில் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் நமது கட்சி சார்பில் தொண்டர்கள் முகநூல், ‘வாட்ஸ்அப்‘, ‘டுவிட்டர்‘ ஆகியவற்றில் அதிகளவில் பிரசாரம் செய்ய வேண்டியது அவசியம். வாக்காளர்களின் செல்போன் எண்களை சேகரித்து அதன் மூலமும் பிரசாரம் செய்ய வேண்டும்.
கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. இந்த சமூக வலைதளங்கள் மூலமாக மாநில காங்கிரஸ் அரசின் ஊழல்களை பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் மத்திய பா.ஜனதா அரசின் சாதனைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.