டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வினை 11,868 பேர் எழுதினர் 4,118 பேர் தேர்வு எழுத வரவில்லை


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வினை 11,868 பேர் எழுதினர் 4,118 பேர் தேர்வு எழுத வரவில்லை
x
தினத்தந்தி 7 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங் களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வினை 11,868 பேர் எழுதினர். 4,118 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அரியலூர்,

தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வு வாரியத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப் பட்ட குரூப் - 2 ஏ தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி உள்பட 26 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு நடந்தது.

இந்த தேர்வுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 7,587 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,680 நபர்கள் நேற்று நடந்த தேர்வில் பங்கேற்றனர். 1,907 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் முறைகேட்டினை தடுக்கும் வகையில் 6 பறக்கும் படைகள் மற்றும் 6 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டது.

தேர்வு நடந்த மையங்களை மாவட்ட கலெக்டர் சாந்தா பார்வையிட்டு, தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பன உள்ளிட்டவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வட்டாட்சியர்கள் பால கிருஷ்ணன், ஷாஜகான், சிவக்குமார், மனோன்மணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, அரசினர் கலை அறிவியல் கல்லூரி உள்பட 15 தேர்வு மையங் களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 8,399 பேர் விண்ணப்பித் திருந்தனர். இதில் 6,188 நபர்கள் நேற்று நடந்த தேர்வில் பங்கேற்றனர். 2,211 பேர் தேர்விற்கு வரவில்லை.

தேர்வில் முறைகேட்டினை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படைகள் மற்றும் 3 நடமாடும் குழுக்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் 24 ஆய்வு அலுவலர்களும், தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் கலை அறிவியல் கல்லூரி தேர்வு மையத்தினை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா பார்வையிட்டார் ஆய்வின் போது, அரியலூர் வட்டாட்சியர் முத்து கிருஷ்ணன் மற்றும் அலுவலர் கள் உடனிருந்தனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 

Related Tags :
Next Story