குரூப்-2 ஏ தேர்வினை 9 ஆயிரத்து 506 பேர் எழுதினர் 3 ஆயிரத்து 471 பேர் வரவில்லை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2ஏ தேர்வினை 9 ஆயிரத்து 506 பேர் எழுதினர். 3 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுதவரவில்லை.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2ஏ தேர்வு நேற்று காலையில் நடைபெற்றது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 19 இடங்களில் 33 தேர்வு மையங்களும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 7 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 10 தேர்வு மையங்களும் என மொத்தம் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்விற்காக புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 907 பேரும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 70 பேரும் என மொத்தம் 12 ஆயிரத்து 977 பேருக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு இருந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்வை புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 236 பேர், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 270 பேர் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 506 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதில் 17 கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும், 17 உடல் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினார்கள். கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேர்வு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் துணையுடன் தேர்வினை எழுதினார்கள். 3471 பேர் தேர்வு எழுதவரவில்லை.
இந்த நிலையில் கலெக்டர் கணேஷ் குரூப்-2 ஏ தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Tags :
Next Story