டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 ‘ஏ’ தேர்வு 19,095 பேர் எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 ‘ஏ’ தேர்வை 19 ஆயிரத்து 95 பேர் எழுதினர். 5 ஆயிரத்து 554 பேர் எழுத வரவில்லை.
திருவண்ணாமலை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 ‘ஏ’ போட்டித் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த போட்டித் தேர்வின் மூலம், பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் நேர்முக எழுத்தர், தட்டச்சர், கிளார்க் உள்ளிட்ட 1,953 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 649 பேர் இந்த தேர்விற்காக விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 ‘ஏ’ தேர்வு 47 இடங்களில் உள்ள 83 தேர்வு மையங்களில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வை 19 ஆயிரத்து 95 பேர் எழுதினர். 5 ஆயிரத்து 554 பேர் எழுத வரவில்லை.
9 பறக்கும் படை
தேர்வின்போது முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க, 83 தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் கொண்ட 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. இந்த பறக்கும்படை அதிகாரிகள் ஒவ்வொரு தேர்வு மையமாக சென்று சோதனை நடத்தினர்.
மேலும், தேர்வு பணிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்றுவர வசதியாக மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையத்துக்குள் செல்போன், கைகடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஆய்வு
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி மற்றும் அதிகாரிகள் தேர்வு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Tags :
Next Story