மதுக்கடைகளை மூட சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்ட டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா
தர்மபுரியில், மதுக்கடைகளை மூட சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்ட டாக்டர் ராமதாசுக்கு தர்மபுரியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
தர்மபுரி,
மதுக்கடைகளை மூட பல்வேறு போராட்டங்களை நடத்தியதோடு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தமிழ்நாட்டில் 3,321 டாஸ்மாக் மதுக்கடைகளையும், இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளையும் மூட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டார். அவருக்கு தர்மபுரி மாவட்ட மக்கள் சார்பில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், அரசாங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் இமயவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலுச்சாமி, பாரிமோகன், மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு தர்மபுரி மாவட்ட மக்கள் சார்பில் வெள்ளி வீரவாள் வழங்கப்பட்டது. இதில் பா.ம.க. இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சமூக நீதிபேரவை தலைவர் வக்கீல் பாலு, பா.ம.க. தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில் மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு டாக்டர் ராமதாசை பாராட்டி பேசினார்கள்.
விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:- டாக்டர் ராமதாசின் பொதுவாழ்க்கை தர்மபுரி மாவட்டத்தில் தான் தொடங்கியது. இம்மாவட்ட மக்களுக்கு உரிய விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், இங்குள்ள இளைஞர்கள் நக்சலைட்டுகளாக மாறியிருப்பார்கள். தர்மபுரி மாவட்டம் உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வளர்ச்சியில் 30-வது இடத்தில் உள்ளது.
இம்மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சம் இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தர்மபுரி மாவட்டத்தை முதல் 3 இடங்களில் கொண்டு வருவதே எனது நோக்கம்.
மேலும் பொருளாதார, விவசாய வளர்ச்சிக்கு 10 நீர்பாசன திட்டங்களை செயல்படுத்தினால் போதுமானது. அவ்வாறு செய்தால் இங்குள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். அதற்காக தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஆனால் இதுவரை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- தமிழகம் மதுவால் சீரழியும் நிலை உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பா.ம.க. பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தியது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அங்கு வந்த தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளும், தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் திட்டங்கள் வைத்துள்ளார். தமிழக வளர்ச்சி திட்டங்களை அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக வரும்போது முழுமையாக நிறைவேற்றுவார். அதற்கான காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி, பசுமைத்தாயகம் மாவட்ட அமைப்பாளர் மாது, மாநில செயற்குழு உறுப்பினர் நம்பிராஜன், மாவட்ட தலைவர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், டி.ஜி.மணி, மதியழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேடியப்பன், மொரப்பூர் ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் பசுவராஜ், சேட்டு மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகரசெயலாளர் தகடூர் தமிழன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story