அரசு மருத்துவமனைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம், அரசு நடவடிக்கை எடுக்க நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை
ஸ்டிரெச்சர் தள்ளுவதற்கு ரூ.300, வீல் சேர் தள்ளுவதற்கு ரூ.100: அரசு மருத்துவமனைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம், அரசு நடவடிக்கை எடுக்க நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை
சென்னை,
அரசு மருத்துவமனைகளில் ஸ்டிரெச்சர் தள்ளுவதற்கு ரூ.300-ம், வீல் சேர் தள்ளுவதற்கு ரூ.100-ம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
ஏழை-எளிய மக்கள் மருத்துவ சேவையை எளிதில் பெறுவதற்கும், குறைந்த செலவில் நோயில் இருந்து குணம் அடைவதற்கும் அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். அரசு இலவசமாக மருத்துவ சேவையை வழங்கினாலும், அங்கு பணிபுரியும் ஊழியர் கள் நோயாளிகளின் உறவினர் களிடம் ஒவ்வொரு வேலைக் கும் லஞ்சம் கேட்பதாக சமீப நாட்களாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அதிலும் குறிப்பாக சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ரத்தம் உரியும் அட்டைப்பூச்சி போல எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்டு ஊழியர்கள் கஷ்டப்படுத்துவதாக நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
லஞ்சம் கேட்பதை புகாராக தெரிவிப்பேன் என்று உறவினர்கள் சொன்னால், யாரும் புகாரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், நாங்கள் (ஊழியர்கள்) அதை சமாளிப்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் என்றும் அகந்தையாக பதில் சொல்வதாகவும் அவர்கள் வேதனையோடு கூறுகின்றனர்.
இதுதொடர்பாக பல்லாவரத்தில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த முருகேசன் என்ற நோயாளியின் உறவினர் செல்வக்குமார் கூறியதாவது:-
தனியார் மருத்துவமனையில் அவர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் தான், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறோம். டாக்டர்கள் நல்ல விதமாக சிகிச்சை அளித்தாலும், மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தாங்க முடியாத அளவுக்கு வேதனையை கொடுக்கிறார்கள். ஸ்டிரெச்சர் தள்ளுவதற்கு ரூ.300, வீல் சேர் தள்ளுவதற்கு ரூ.100 என எதற்கு எடுத்தாலும் பணம் கேட்டு கஷ்டப்படுத்துகிறார்கள்.
எங்களுக்கு சம்பளம் குறைவு. நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்து தான் சம்பளத்தை நிவர்த்தி செய்துகொள்கிறோம் என்று வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்காவிட்டால் வசை பாடுகிறார்கள். ஏன் இப்படி லஞ்சம் கேட்கிறீர்கள்? என்று சொன்னால், டாக்டர்களுக்கு டீ, பிஸ்கெட் இந்த பணத்தில் தான் வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
இவ்வாறாக லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் குறித்து புகார் தெரிவிக்க ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் அதிகாரிகளை நியமித்து உடனுக்குடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், அரசு வழங்கும் இந்த மருத்துவ சேவைக்கு நாளடைவில் மதிப்பில்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story