பாராளுமன்ற செயலகத்தில் வேலைவாய்ப்பு
இந்திய பாராளுமன்றத்தின் மேலவை செயலகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொழி பெயர்ப்பாளர், உதவி நிர்வாக அதிகாரி, செயலக உதவியாளர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் அதிகபட்சமாக செயலக உதவியாளர் பணிக்கு 39 பேரும், பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 21 பேரும், உதவி நிர்வாக அதிகாரி பணிக்கு 20 பேரும், மொழி பெயர்ப்பாளர் பணிக்கு 19 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறு படுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணைய தளத்தில் பார்க்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
முதுநிலை இந்தி, ஆங்கிலம், ஒடியா படித்தவர்கள், பட்டப் படிப்புடன், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுக்கத் தெரிந்து தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
முதல்நிலைத் தேர்வு, எழுத்துத்தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்தந்த பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்படும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், ரூ.300 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படு கிறது. 18-8-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கவும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rajyasabha.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Related Tags :
Next Story