கொச்சி விமானம் சென்னையில் தரை இறங்கியது பயணிகள் தவிப்பு


கொச்சி விமானம் சென்னையில் தரை இறங்கியது பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2017 5:00 AM IST (Updated: 8 Aug 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து 292 பயணிகளுடன் கேரள மாநிலம் கொச்சிக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு விமானம் வந்தது. அப்போது கொச்சியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தால், அங்கு தரையிறங்க முடியாமல் அந்த விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையில் தரை இறங்கிய அந்த விமானம் இரவு 8 மணி அளவில் கொச்சிக்கு செல்ல அனுமதி கிடைத்த போது, தங்களுடைய பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி விமானிகள் ஓய்வு எடுக்க சென்றுவிட்டனர். இதனால் அதில் இருந்த பயணிகள் தவித்தனர். அது பன்னாட்டு விமானம் என்பதால் குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகள் காரணமாக அதில் இருந்த பயணிகளை கீழே இறக்கி வேறு விமானத்தில் அனுப்பி வைக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீண்ட நேரமாக விமானத்திலேயே இருப்பதால் தங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என கோரி பயணிகள் போராடினார்கள். இதைத்தொடர்ந்து, விமான நிறுவனத்தின் சார்பில் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. சுமார் 16 மணி நேரத்திற்கு பின் மாற்று விமானிகள் மூலம் நேற்று காலை 10 மணி அளவில் அந்த விமானம் பயணிகளுடன் கொச்சி புறப்பட்டு சென்றது.


Next Story