அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் தொடக்கம்


அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் தொடக்கம்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:45 PM GMT (Updated: 7 Aug 2017 9:03 PM GMT)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி,

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங்கியது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பம் வினியோகத்தை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாந்தகுமார் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் கலைவாணி முன்னிலை வகித்தார்.

நேற்று காலை முதல் விண்ணப்பங்களை வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் இலவசமாகவும், மற்ற வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ.400 வரைவோலை செலுத்தி விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். தூத்துக்குடிக்கு மொத்தம் 800 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இதில் ஒரே நாளில் 300 பேர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். தொடர்ந்து விண்ணப்பங்கள் வினியோகம் வருகிற 23-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. 

Next Story