மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு நெல்லையில், விண்ணப்பங்கள் வினியோகம்
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு நெல்லையில் விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்ப படிவங்களை வாங்கிச் சென்றனர்.
நெல்லை,
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய்குறியியல்), பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளுக்கு நேற்று முதல் விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று காலை 10 மணிக்கு விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது. கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா, விண்ணப்பம் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 1,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.400 ஆகும். எஸ்.சி.-எஸ்.டி. வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கான விண்ணப்ப மனுவுடன் சான்றொப்பம் பெறப்பட்ட சாதி சான்றிதழை இணைத்து கொடுக்க வேண்டும்.
வருகிற 23-ந் தேதி வரை விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 24-ந் தேதி மாலை 5 மணிக்குள் சென்னைக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, துணை முதல்வர் கண்ணன், கல்வி அலுவலர் அபுல்காசிம், நிர்வாக அலுவலர் செல்லப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. நீண்ட வரிசையில் மாணவ-மாணவிகள் நின்று விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

Related Tags :
Next Story