ரசிகர்களுக்கு, அமிதாப்பச்சன் திடீர் எச்சரிக்கை


ரசிகர்களுக்கு, அமிதாப்பச்சன் திடீர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2017 10:20 PM GMT (Updated: 7 Aug 2017 10:20 PM GMT)

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அக்டோபர் 11-ந் தேதியன்று 75-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

மும்பை,

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அக்டோபர் 11-ந் தேதியன்று 75-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது இந்த பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில், ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில் அமிதாப்பச்சன் நேற்று கருத்து பதிவு செய்திருக்கிறார்.

அதில், “என்னுடைய 75-வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட ஏராளமானோர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற பிரமாண்டங்களை நான் ஏற்கவும் மாட்டேன், அனுமதிக்கவும் மாட்டேன். என்னுடைய விருப்பங்களுக்கு நீங்கள் மதிப்பு அளிக்கவில்லை என்றால், யாருமே இல்லாத, யாருக்குமே தெரியாத இடத்துக்கு சென்றுவிடுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story