ஏம்பலம் தொகுதியில் நலத்திட்ட பணிகள்; அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்


ஏம்பலம் தொகுதியில் நலத்திட்ட பணிகள்; அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:41 AM IST (Updated: 8 Aug 2017 4:41 AM IST)
t-max-icont-min-icon

ஏம்பலம் தொகுதி பனித்திட்டில் புதியதாக அரசு சார்பில், இலவச மனைப்பிரிவுகள் வழங்க உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் சாலையை மேம்படுத்துவதற்காக,

பாகூர்,

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.16 லட்சம் செலவில் பூமி பூஜை நடந்தது.அதனை தொடர்ந்து, புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில், ரூ.8 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூஜை ஏம்பலம் தொகுதி நரம்பை கிராமத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், உதவி பொறியாளர் தமிழரசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கன்னியப்பன், உதவிப்பொறியாளர் ஞானசேகரன், பனித்திட்டு முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் அஞ்சாபுலி, ராமலிங்கம், நரம்பை கிராம தலைவர் செல்வநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Next Story