பாதுகாப்பான ‘ஸ்மார்ட்’ ஏணி


பாதுகாப்பான ‘ஸ்மார்ட்’ ஏணி
x
தினத்தந்தி 8 Aug 2017 1:04 PM IST (Updated: 8 Aug 2017 1:04 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால்கோ ‘லைப்ஸ்டைல்’ நிறுவனம், ஸ்மார்ட் ஏணி ஒன்றை வடிவமைத்துள்ளது.

ணியில் ஏறும்போது உயரமும், பாதுகாப்பில்லாத நிலையும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துவது உண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால்கோ ‘லைப்ஸ்டைல்’ நிறுவனம், இந்த தடுமாற்றத்தைப் போக்கும் வகையில், ஸ்மார்ட் ஏணி ஒன்றை வடிவமைத்துள்ளது. இதன் படிக்கட்டுகளில் பேட்டரியுடன் கூடிய சென்சார்கள் இணைக்கப்பட்டிருக்கும். இது நாம் நிற்கும் அல்லது நகரும் கோணத்தை கண்காணிக்கும். நாம் சாயும் நிலையை அறிந்தால் உடனே எச்சரிக்கை ஒலி எழுப்பும். 70 மணி நேரத்திற்கு இதன் பேட்டரிகள் செயல்படக்கூடியது. ‘ஸ்டெப் ஸ்மார்ட்’ எனப்படும் இந்த ஏணியை அமெரிக்காவின் கிக்ஸ்டார்ட்டர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. விலை 44 அமெரிக்க டாலர்கள். 

Next Story