அருப்புக்கோட்டையில் வீடு தேடிச்சென்று பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் திட்டம்


அருப்புக்கோட்டையில் வீடு தேடிச்சென்று பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் திட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2017 3:15 AM IST (Updated: 9 Aug 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து வாங்கி உரிய முறையில் அப்புறப்படுத்தும் பொருட்டு இன்று முதல் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க உள்ளனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து வாங்கி உரிய முறையில் அப்புறப்படுத்தும் பொருட்டு இன்று(புதன்கிழமை)முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க உள்ளனர். முதற்கட்டமாக 3, 12, 16, 20, 25, மற்றும் 32 ஆகிய வார்டுகளில் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் பிளாஸ்டிக் கழிவுகள் தவிர வேறு குப்பைகள் வாங்கப்பட மாட்டாது எனவும் மற்ற நாட்களில் மக்கும் தன்மையுள்ள குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்படும் என்றும் நகரசபை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டும் கலந்து குப்பைகள் வாங்கப்படும் பட்சத்தில் ஒவ்வொரு முறைக்கும் ரூ.10 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து சேர்த்து வைத்து வீடுதேடி வரும் துப்புரவு பணியாளர்களிடம் வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story