ரூ.20 கோடி செலவில் கடற்கரை நடைபாதையை மேம்படுத்த நடவடிக்கை


ரூ.20 கோடி செலவில் கடற்கரை நடைபாதையை மேம்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

ரூ.20 கோடி செலவில் கடற்கரை நடைபாதையை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் மொத்த வருவாயில் சுற்றுலாவின் பங்கு முக்கியமாக விளங்குகிறது. எனவே வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை மாநில அரசு மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தி வருகிறது.

புதுவை தலைமைச் செயலகம் எதிரே கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதேபோல் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் கடற்கரையில் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி நடந்து செல்ல ஏதுவாக தற்போது குண்டும் குழியுமாக உள்ள நடைபாதையை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.20 கோடி செலவில் நடைபாதை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், அரசு செயலாளர்கள் மிகிர்வரதன், பார்த்திபன், கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடைபாதையை எவ்வளவு காலத்துக்குள் மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Next Story