வெள்ளாளபாளையத்தில் மதுக்கடை திறந்தால் வாக்காளர் அட்டை, ரே‌ஷன்கார்டை திருப்பி ஒப்படைப்போம் பொதுமக்கள் அறிவிப்பு


வெள்ளாளபாளையத்தில் மதுக்கடை திறந்தால் வாக்காளர் அட்டை, ரே‌ஷன்கார்டை திருப்பி ஒப்படைப்போம் பொதுமக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2017 3:30 AM IST (Updated: 9 Aug 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

கோவை கணேசபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது.

சரவணம்பட்டி,

கோவை அருகே கோவில்பாளையத்தை அடுத்த கணேசபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது. பின்னர் டாஸ்மாக் அதிகாரிகள் அந்த கடையை கரியாம்பாளையம் ஊராட்சி வெள்ளாளபாளையத்தில் திறக்க முடிவு செய்து புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கரியாம்பாளையம், காரேகவுண்டம்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த அரசியல் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த பகுதிகளில் மதுக்கடை அமைக்கக்கூடாது. அதையும் மீறி கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன்கார்டு ஆகியவற்றை திருப்பி ஒப்படைப்போம் என்று அறிவித்துள்ளனர்.


Next Story