புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை


புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கவுரி, ராஜேந்திரபாபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், ஊராட்சி மன்ற செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுகும்மிடிப்பூண்டியில் வீடு, வீடாக சென்று முதல்கட்ட காய்ச்சலை மருத்துவகுழுவினர் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். கொசு புழு ஒழிப்பு பணியில் 30–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு பயனாளிகள் மூலம் ஊராட்சி முழுவதும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கிராம மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிய சுகாதார துறையினர், பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தையும் நடத்தினர்.


Next Story