டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கும் எந்திரங்கள் ஆணையர் வழங்கினார்


டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கும் எந்திரங்கள் ஆணையர் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 8 Aug 2017 9:23 PM GMT)

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கும் எந்திரங்களை தஞ்சை மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களிடம் ஆணையர் வரதராஜ் வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று தஞ்சையில் நடந்தது. முகாமிற்கு மாநகராட்சி ஆணையர் வரதராஜ் தலைமை தாங்கினார். மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், வட்டார சுகாதார அலுவலர் போத்திப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பிளாஸ்டிக் கப், டயர், உடைந்த மண்பானை போன்றவற்றில் மழை நீர் தேங்கியிருந்தால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகும் எனவும், கொசு உற்பத்தியாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கொசுக்களை ஒழிக்க ரூ.7 லட்சம் மதிப்பில் 10 புகை அடிக்கும் எந்திரங்களை துப்புரவு பணியாளர்களிடம் ஆணையர் வரதராஜ் வழங்கினார்.

பின்னர் துப்புரவு ஆய்வாளர்கள் கூறும்போது, பொதுமக்கள் கட்டிடங்களில் உள்ள மேற்கூரைகள், சூரிய ஒளி தகடுகள், வீட்டின் முன்பகுதியில் உள்ள சிலாப்புகள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் ஒழிப்பு பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்க சிலர் மறுக்கின்றனர். அவர்களை வீட்டிற்குள் அனுமதித்து கொசுவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.


Next Story