ஜெயங்கொண்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

வாரியங்காவல்,
உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. உடையார்பாளையம் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமை தாங்கினார். போட்டிகளை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன் தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது பரிவுகளில் 100, 200, 400, 800, 1,000, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 51 பள்ளிகளில் இருந்து 577 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், நிர்மலாமேரி ஆகியோர் நடத்தினர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். முடிவில் கரிகாலன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story