சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவன் பலி
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவன் பலியானான்.
எடப்பாடி,
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முகாம்கள் நடத்தப்பட்டு நிலவேம்பு கசாயமும் வழங்கப்படுகிறது. இருந்தாலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நாள்தோறும் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
நேற்று முன்தினம் தலைவாசல் ஊராட்சி 3-வது வார்டு சிவன் கோவில் பகுதியை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவரது மகனான 9-ம் வகுப்பு மாணவன் பிரகதீஷ்வரன் (வயது 14) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான்.
இதற்கிடையே, நேற்று மேலும் ஒரு மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றி விவரம் வருமாறு:-
எடப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி ஊராட்சி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜீ. அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகே மீன் வறுவல் கடை வைத்து உள்ளார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு தங்கம்மாள், ஐயம்மாள் என்ற 2 மகள்கள், நல்லதம்பி, செல்வராஜீ என்ற 2 மகன்கள். கடைசி மகன் செல்வராஜீ (12) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் செல்வராஜீக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து உள்ளது. இதையடுத்து எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். இதற்கிடையில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜீ உயிரிழந்தான்.
டெங்கு காய்ச்சல் முற்றியதால்தான் தனது மகன் இறந்து விட்டதாக அவனது தந்தை ராஜீ தெரிவித்தார். இதற்கிடையில், அவர்கள் வசித்து வந்த பனங்காடு பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தூய்மைப்படுத்தும் பணி மற்றும் புகைமருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story