திருமதி அழகி போட்டியில் பங்கேற்றவரிடம் ஆபாச சைகை பெண் உள்ளாடைகள் அணிந்த ‘சைக்கோ’


திருமதி அழகி போட்டியில் பங்கேற்றவரிடம் ஆபாச சைகை பெண் உள்ளாடைகள் அணிந்த ‘சைக்கோ’
x
தினத்தந்தி 9 Aug 2017 4:39 AM IST (Updated: 9 Aug 2017 4:38 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகர போலீசாரின் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பெங்களூரு,

கடந்த 6–ந் தேதி நான் எனது கணவருடன் நைஸ் ரோட்டில் பன்னரகட்டா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, கார் பழுதானது. காரில் இருந்து இறங்கிய எனது கணவர் மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக இன்னொரு வாகனத்தில் ‘லிப்ட்‘ கேட்டு சென்றார். கார் அருகே நான் நின்றேன்.

அப்போது எனது அருகே ‘சைக்கோ‘ வாலிபர் ஒருவர் வந்தார். அந்தநபர் தனது உதட்டில் உதட்டுசாயம் போட்டு இருந்ததோடு, பெண்களின் உள்ளாடைகளை அணிந்திருந்தார். என்னை உற்றுநோக்கி அருகில் வந்த அவர் ஆபாச சைகை காண்பித்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவரை செல்போனில் படம் எடுக்க முயன்றபோது அவர் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். உதவிக்கு நைஸ் நிர்வாகத்தின் அவசர அழைப்புக்கு தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த புகாரை மாநகர போலீசார் பன்னரகட்டா போலீசாருக்கு மாற்றம் செய்தனர். பன்னரக்கட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘சைக்கோ‘ வாலிபரை வலைவீசி தேடிவருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண், இந்திய திருமதி அழகி போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story