பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை


பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை
x
தினத்தந்தி 10 Aug 2017 2:00 AM IST (Updated: 9 Aug 2017 6:55 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். தனது அளவற்ற 3ஜி டேட்டாவை வழங்குவதற்கு, தற்போதுள்ள டேட்டா பூஸ்டர் 139 மற்றும் கோம்போ பூஸ்டர் 349–ஐ 26 நாட்கள் வேலிடிட்டியாகவும்

நெல்லை,

பி.எஸ்.என்.எல். தனது அளவற்ற 3ஜி டேட்டாவை வழங்குவதற்கு, தற்போதுள்ள டேட்டா பூஸ்டர் 139 மற்றும் கோம்போ பூஸ்டர் 349–ஐ 26 நாட்கள் வேலிடிட்டியாகவும், கோம்போ பூஸ்டர் 395 மற்றும் கோம்போ பூஸ்டர் 666–ஐ 60 நாட்கள் வேலிடிட்டியாகவும், கோம்போ பூஸ்டர் 444–ஐ 90 நாட்கள் வேலிடிட்டியாகவும் மாற்றி, முன்பு வழங்கி வந்த கோடைகால சலுகைகளை நிறுத்தி வைத்துள்ளது.

ரக்ஷா பந்தன் சலுகையாக வருகிற 18–ந் தேதி வரை 5 நாட்கள் வேலிடிட்டி கொண்ட கோம்போ 74–ஐயும், முறையே 14, 28 மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட கோம்போ 188, கோம்போ 289 மற்றும் கோம்போ 389 பூஸ்டர்கள் மூலம் தொலைபேசி கால்கள் மற்றும் டேட்டாவில் சலுகைகள் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

மேற்கண்ட சலுகைகளை பொதுமக்கள் பெறுவதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் இன்று (வியாழக்கிழமை) மெகா மேளா நடக்கிறது. இதில் 3ஜி சிம்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பில்லிங் சம்பந்தப்பட்ட குறைகளையும் நிவர்த்தி செய்யலாம்.

இந்த தகவலை, நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.


Next Story