கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள்


கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள்
x
தினத்தந்தி 10 Aug 2017 2:00 AM IST (Updated: 9 Aug 2017 7:31 PM IST)
t-max-icont-min-icon

கிராம வங்கிகளின் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 17–ந்தேதி சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

திருச்செந்தூர்,

கிராம வங்கிகளின் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 17–ந்தேதி சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

அலுவலக உதவியாளர் பணி

கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் சிவந்தி அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது.

இத்தேர்வு பற்றிய விவரங்களை www.ibps என்ற இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம். மேலும், இத்தேர்வுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.8.2017 ஆகும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

பயிற்சி வகுப்புகள்

‘பிரிலிமினரி’ மற்றும் மெயின் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகிற 17–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான 17–8–2017 அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர....

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் உள்ள சிவந்தி அகாடமியில் ரூ.3 ஆயிரத்தை வருகிற 17–ந்தேதி காலை 9 மணிக்கு நேரில் செலுத்த வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

மேலும் தகவலுக்கு 04639–242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story