வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கியவர் கைது


வாகன சோதனையில் ஈடுபட்ட  போலீஸ்காரரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2017 3:45 AM IST (Updated: 9 Aug 2017 9:19 PM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

குளச்சல்,

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் குளச்சல் அண்ணாசிலை முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை போலீசார் தடுத்தனர். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார்.

போலீஸ் மீது தாக்குதல்

உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மண்டைக்காடு சி.ஆர்.எஸ். நகரை சேர்ந்த அனிஷ் என்பது தெரியவந்தது. அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அனிஷ், போலீஸ்காரர் ரெத்தினேஸ்வரனை(வயது34) தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ரெத்தினேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிசை கைது செய்தனர்.


Related Tags :
Next Story