முதல்–அமைச்சர் வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி


முதல்–அமைச்சர் வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 10 Aug 2017 4:00 AM IST (Updated: 10 Aug 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து கார் மூலம் விழுப்புரம் சென்றார்.

தாம்பரம், ஆக.10–

அவரை வரவேற்க சென்னை புறநகர் பகுதியில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு சாலை முழுவதும் கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.

தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முதல்–அமைச்சர் தாம்பரம் வருவதற்கு முன்பே பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரும் வாகனங்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டது. தாம்பரத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் கலந்து கொண்டு விட்டு அவருடைய கான்வாய் வாகனங்கள் செல்லும் வரை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வந்த வாகனங்கள், தாம்பரம் சானடோரியம் பகுதியில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதேபோல தாம்பரம் பெட்ரோல் பங்க் சிக்னல் அருகில் பெருங்களத்தூர் செல்ல திரும்பும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. கடுமையான வெயிலில் சுமார் அரை மணிநேரத்துக்கு மேல் சானடோரியத்தில் இருந்து பல்லாவரம் வரை தாம்பரம் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.


Next Story