பள்ளிக்கூடங்களில் புதிய பாடத்திட்டம் பற்றி கருத்து தெரிவிக்க பெட்டி


பள்ளிக்கூடங்களில் புதிய பாடத்திட்டம் பற்றி கருத்து தெரிவிக்க பெட்டி
x
தினத்தந்தி 10 Aug 2017 4:15 AM IST (Updated: 10 Aug 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

சென்னை,

இதைத்தொடர்ந்து பாடத்திட்டம் தயாரிக்க அண்ணாபல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் வடிவமைப்பது குறித்து அண்ணாபல்கலைக்கழகம், கலைவாணர் அரங்கம் டி.பி.ஐ. வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி அனைத்து பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குனரகத்திற்கு ஒரு சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளிலும் பாடத்திட்ட வடிவமைப்பு குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க கருத்து பெட்டி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையொட்டி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இயக்குனரகங்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளன. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் கருத்து பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story