மூளைக்காய்ச்சலால் மாணவன் சாவு


மூளைக்காய்ச்சலால் மாணவன் சாவு
x
தினத்தந்தி 10 Aug 2017 4:45 AM IST (Updated: 10 Aug 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா காவேரிராஜுவாரிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தங்கம். எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்.

பள்ளிப்பட்டு,

இவரது மகன் மோகன் (வயது 10). அங்குள்ள தனியார் பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு கடந்த சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவனை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மாணவனை பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் மாணவனுக்கு மூளை காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் மோகன் பரிதாபமாக இறந்தான். காவேரிராஜுவாரி கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் மாணவன் மோகன் இறந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story