தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு காதல் ஜோடி மாயம்


தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு காதல் ஜோடி மாயம்
x
தினத்தந்தி 10 Aug 2017 5:15 AM IST (Updated: 10 Aug 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு காதல்ஜோடி மாயம் ஆனது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள காரணி பாட்டை கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 17 வயது மகளும், இவர்களது வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் நரேஷ் (வயது 23) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த ஆட்டோ டிரைவர் வெங்கல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ‘‘என்னை யாரும் தேட வேண்டாம். எனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நான் உங்கள் கண்ணுக்கு தெரியாத இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று தனது மகள் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதாக குறிப்பிட்டிருந்தார்.

அதே போல் நரேஷின் தந்தை நைனியப்பனும் வெங்கல் போலீஸ் நிலையத்தில், ‘‘காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கண்ணுக்கு தெரியாத இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொள்வதாக கூறி தனது மகன் நரேஷ் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி உள்ளார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பெற்றோர்கள் கொடுத்த புகார்களையும், காதலர்களின் கடிதங்களையும் போலீசார் பெற்று கொண்டனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடி மாயமானது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story